நீங்கள், செலுத்தும் வீட்டுக்கடன் தொகையை காண்பித்து, வரியில் சலுகையைப்பபெறலாம். இந்த சலுகையைப்பெற நீங்கள் பிரதி வருடம் வருமான வரி சான்றிதழைக்கண்டிப்பாக பெற வேண்டும். இந்த சான்றிதழில் நீங்கள் கட்ட வேண்டிய மொத்த வட்டியின் தொகை மதிப்பும் நடப்பு ஆண்டில் நீங்கள் செலுத்திய மூலதனத்தின் அசல் தொகையின் மதிப்பும் கொடுக்கப்பட்டிருக்கும். வீட்டை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தும் நபர் கட்டாயமாக இந்த வரிச்சலுகையை கோர வேண்டும்.

நீங்கள் உங்களது தனிப்பட்ட வருமான வரி விவர அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் உங்கள் கடன் தொகையை கணக்கிட வேண்டும்.

நடப்பு நிதி ஆண்டில் அனுமதிக்கப்பட்ட புதிய விதிகளின் கீழ் கிடைக்கப்பெறும் உச்சவரம்புத்தொகையை சரிபார்ப்பதை நினைவில் கொள்ளவும்.

A. வரிச்சலுகைகள்

I . வருமான வரிச்சட்டம் 1961ன் கீழ்

a) வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கான சலுகைகள்:
i.) வருமான வரிச்சட்டம் 1961ன் இரண்டாம் நிபந்தனை 24(பி) பிரிவின் கீழ் 1999ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிற்குப்பிறகு, வீட்டைக் கையகப்படுத்திக்கொள்ள / கட்டுமானப் பணி தொடங்க செலுத்திய கடன் தொகைக்கான வட்டியில் ரூ.1,50,000 தொகை கழிவினால் கிடைக்கக்கூடிய தொகையாகும், இது கடன் தொகை வாங்கிய தேதியிலிருந்து வீட்டைக் கையகப்படுத்திக்கொள்ள / கட்டுமானப் பணி தொடங்கல் போன்றன 3 வருடங்களுக்குள் முடியும் பட்சத்தில் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.

ii.) வீட்டை கையகப்படுத்திக்கொள்ள / கட்டுமானப் பணிக்காக கடன் தொகை வாங்கப்பட்டடால், வீட்டை கையகப்படுத்திக்கொள்ள / கட்டுமானப் பணி துவங்கும் முன் கொடுக்கப்படவேண்டிய தொகையின் வட்டி, வீட்டை கையகப்படுத்திக்கொள்ள / கட்டுமானப் பணி ஆரம்பித்தபின்னர் சமமான தவணைகளில் அடுத்து வரும் 4 ஆண்டுகளில் பிடிக்கப்படும்.

iii.) மேற்கண்ட (1) மற்றும் (2) ல் குறிப்பிட்ட பிடித்தம் மற்றும் சலுகைகள், கடன் வாங்குபவர் தான் வாங்கும் கடன் தொகை மற்றும் வட்டி விகிதம் முதலான தகவல்கள் அடங்கிய சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே வழங்கப்படும்.

iv.) வருமான வரிச் சட்டம் 1961 80சி பிரிவின் கீழ், தனி நபர் மற்றும் இந்து கூட்டுக்குடும்பச் சட்டப்பிரிவின் படி வீட்டுக்கடன் மீதான அசல் தொகை செலுத்துதலில் ரூ.1,00,000/-க்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது

II. சொத்து வரி சட்டம், 1957

a) சொத்து வரி சட்டம் 1957 பிரிவு 5(1)ன் கீழ், வரி செலுத்துபவர் ஒரு வீட்டை மட்டும் தனது சொந்த உபயோகத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் மற்றும் அந்த வீடு மட்டும்தான் சொத்துவரி விலக்குக்கு உட்பட்டது.

b) வரி செலுத்துபவர் ஒன்றுக்கு மேற்பட்ட சொத்து வைத்திருப்பாரானால், இரண்டாவது சொத்து வரியின் சட்டவிதிகள் 1958ன் கீழ் உள்ள சொத்து வரியின் கீழ் உட்பட்டது. மேலும், அதன் ரூ.15,00,000 க்கு மேல் இருந்தால் சொத்து வரிக்குட்பட்டது, மேற்குறிப்பிட்ட சொத்தின் பேரில் ஏதேனும் கடன் இருந்தால், வரிவிதிக்குட்பட்ட சொத்தின் மதிப்பு கணக்கிடப்படுவதற்கு முன்பாக கடன் தொகை கழிக்கப்படும்.

c) வரி செலுத்துபவர் ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்து வைத்திருந்து, அந்த இரண்டாவது சொத்தை முந்தைய வருடத்தில், 300 நாட்களுக்கு மேல் வாடகைக்கு விடப்பட்டிருந்தால், அந்த சொத்து வரி கணக்கெடுப்பிற்கு தகுதி உள்ளதாக ஏற்கப்படமாட்டாது.

B. வரி கட்டுவதன் விளைவு:

பிரிவு 80Cயின் கீழ் கழிவிற்கு முறையீடு செய்யப்பட்ட சொத்து வரி விதி செலுத்துபவர் அந்த சொத்தை கையகப்படுத்திக் கொண்ட நிதி ஆண்டின் இறுதியிலிருந்து 5 வருடங்களுக்குள் மற்றொருவருக்கு மாற்றி கொடுப்பாரானால் மாற்றப்பட்ட வருடத்தில் வரி விலக்கு அளிக்கப்பட மாட்டாது, மற்றும் ஏற்கனவே அளிக்கப்பட்ட வரி விலக்கு தொகை சொத்தை மாற்றிய வருடத்திலிருந்து வருமானத்துடன் சேர்க்கப்பட்டு அதற்கேற்றவாறு வரி விதிக்கப்படும்.

நிறுவனத்தின் உறுப்பினருக்கான

B. வருமானவரிச் சட்டம் 1961ன் கீழ்

1.) வருமான வரிச்சட்டம் 1961, பிரிவு 10(34)ன் கீழ் உள் நாட்டு நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட இலாபப்பங்கின் வருமானத்துக்கு விலக்கு அளிக்கப்படும்.

2.) நிறுவனத்தின் பங்குதாரர் நிறுவனத்தில் தனது பங்கை 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தாரானால் பிரிவு 10(38)ன் தன்மையின் படி நெடுந்தவணை மூலதன ஆதாய வரித்தொகையை கட்ட வேண்டிய அவசியம் இல்லை, இச்சலுகை கீழ்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அவசியம் கொண்டது:

(a) சம ஒப்பு பங்கு விற்பனைப் பரிவர்த்தனை 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதியன்று அல்லது அதன் பிறகு செய்யப்பட்டிருந்தாலும்

(b) நிதி (எண்.2) விதிமுறை 2004, அத்தியாயம் (7)ன் கீழ் இந்த பரிவர்த்தனை, ஆவண பரிவர்த்தனை வரிக்கு உட்படுத்தப்பட்டு வசூலிக்கப்படும்.பிரிவு நிபந்தனை குறிப்பின்படி, தனி நபர் மற்றும் இந்து கூட்டுக்குடும்பத்தில் மொத்த வருமானம் குறுகிய கால முதலீட்டு லாபமாக குறைக்கப்படும்போது அத்தொகை அதிகபட்ச தொகையைவிட குறைவாக இருப்பின், அத்தொகை வரிக்கு உட்படுத்தப்படமாட்டாது. அந்த குறுகிய கால முதலீட்டு லாபமானது மொத்த வருமானத்தில் இருந்து குறைக்கப்பட்டு வரிக்கு உட்படாத தொகை தவிர மீதமுள்ள குறுகிய கால முதலீட்டுத் தொகைக்கு 10% வரி கணக்கிடப்படும்.

3.) நிறுவனத்தின் பங்கீட்டை மாற்றுவதன் மூலம் ஏற்படும் குறுகிய கால முதலீட்டுத் தொகைக்கு 10% வரிக்கு (பொருத்தமான கூடுதல் கட்டணம் மற்றும் கல்வி தீர்வும் கூடுதலாக) உட்படுத்தப்படும். இச்சலுகை கீழ்கண்ட நிபந்தனைகளின்படி பிரிவு 111(அ)ன் படி நிவர்த்தி செய்தலுக்கு உட்பட்டது:

(a) சம ஒப்பு பங்கு விற்பனைப் பரிவர்த்தனை 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதியன்று அல்லது அதன் பிறகு செய்யப்பட்டிருந்தாலும்

(b) நிதி (எண்.2) சட்டம் 2004, அத்தியாயம் 7இன் கீழ் பரிவர்த்தனைக்கு, பாதுகாப்பு பரிவர்த்தனை வரி வசூலிக்கப்படும்..
மேலும், மூலதன இலாபம் நிர்வாகத்தில் மறுபடியும் முதலீடு செய்யப்படும் போது, நிர்வாக பங்கின் பொது வெளியீடு மூலதன வெளியீட்டிற்கு தகுதி பெறுவதுடன், நீண்ட கால மூலதன இலாபமும் பிரிவு 54 EDயின் சலுகைக்கு தகுதி பெறுகிறது.


சொத்து வரிச்சட்டம் 1957ன் கீழ் .

உள் நாட்டு நிறுவனங்களில் உள்ள பங்கீட்டுத்தொகை சொத்து வரிச்சட்டம் 1957ன் கீழ் “சொத்துடமை” ஆகாது. அதனால் மேற்குறிப்பிட்ட பங்கீடுகள் வைத்திருக்கும் பங்குதாரர் சொத்து வரிக்கு உட்பட வேண்டிய அவசியம் ஏற்படாது.

நிறுவனத்தின் இந்திய குடியுரிமை அல்லாத உறுப்பினர்களுக்கு

C. வருமான வரிச்சட்டம் 1961ன் கீழ்

1.) பிரிவு 115E சட்டத்தின் கீழ், நிறுவனத்தின் பங்குகளை ஒரு வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர் பெற்ற அல்லது செலுத்திய மாற்றத்தக்க அன்னிய செலவாணியை அந்த வெளிநாடு வாழ் இந்தியர் 12 மாதங்களுக்கு மேல் பங்கு பரிமாற்றம் செய்ததால் பெற்ற மூலதன லாபத்தொகைக்கு சட்டத்தின் படி வட்டி விகித சலுகை 10% விகிதம் தரப்படலாம். (பொருத்தமான கூடுதல் கட்டணம் மற்றும் கல்வி தீர்வும் கூடுதலாக) உட்படுத்தப்படும்.(சட்டத்தின் பிரிவு 115D இல் கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் பரிசீலிக்கலாம்).வருமான வரிச்சட்டம் 1961, பிரிவு 115Fன் கீழ், நீண்டகால மூலதன ஆதாயம் மேற்குறிப்பிட்ட 1 ல் கூறியதுபோல் அவன்/அவள் அனைத்து சொத்துக்களையும் அல்லது நிகர சொத்துக்களின் ஒரு பகுதியை வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 115C(f )வரையறுக்கப்பட்டவாறு குறிப்பிட்ட சொத்தில் முதலீடு செய்யும்போது,6 மாதங்களுக்குள் சொத்துப்பரிமாற்றம் செய்யப்பட்டால் நீண்டகால மூலதன ஆதாயத்திற்கு முற்றிலும்/விகிதாசாரத்தில் வருமான வரி விலக்கு கொடுக்கப்படும். எனினும் 3 ஆண்டுகளுக்குள் சொத்து மாற்றப்பட்டாலோ அல்லது பணமாக மாற்றப்பட்டு இருந்தாலோ அவர் சொத்தை கையகப்படுத்திய நாளிலிருந்து மேற்குறிப்பிட்ட பிரிவில் சொன்னபடி பிரிவு115F(2)ன் ஏற்பாடுகளின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்ட தொகை வரி விதிப்பதற்குரியதாகலாம்.

3.) வருமான வரிச்சட்டம் 115 Gயின்படி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தனது மூலதன வருவாய் அல்லது நீண்டகால மூலதன லாபத்தை மட்டுமே சார்ந்து இருந்தால் அவர் அத்தொகைக்கு வரிதாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அல்லது அவர் பிற சொத்துக்கள் கையகப்படுத்துதல், வாங்குதல் அல்லது மாற்றத்தகாத அன்னிய செலாவணி செலுத்தினாலோ சம்பளம் வழங்குமிடத்துப் பிடித்தம் செய்யப்படும் வரி அங்கிருந்தே பிடித்தம் செய்யப்படும்.

4.) சட்டத்தின் பிரிவு 115-ஐன் படி வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவர், (எ.டு. ஒருவர் இந்திய நாட்டை சேர்ந்தவர் அல்லது இந்தியாவில் பிறந்தவர் ஆனால் இந்தியாவில் வசிக்காதவர்) வருமான வரிச்சட்டம் 1961,அத்தியாயம் XII-ஏ ன் விதிகள் அவரை கட்டுப்படுத்தாது, ஆனால், அவன்/அவள் மொத்த வருமானம் சட்டத்தின் பிற விதிகளின்படி அதற்கு ஏற்றவாறு கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும்.

5.) சட்டத்தின் பிரிவு 10(34)ன்படி உள்நாட்டு நிறுவனம் மூலம் கிடைத்த லாப வருமான வருவாய் சட்டத்தின் பிரிவு 115-O ல் குறிப்பிட்டபடி அதன் பங்குதாரர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

6.) இதர நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட இரட்டை வரி ஒப்பந்தத்தின்படி (DTA) வட்டி விகித சலுகைகள், நிறுவனத்தில் பங்கீடு செய்வதால் கிடைக்கும் லாபம் போன்றவைக்கு வருமான வரிச் சட்டம் 1961க்கேற்ப பெற்றுக்கொள்ளலாம்.

சொத்து வரிச்சட்டம் 1957ன் கீழ்.

உள் நாட்டு நிறுவனங்களில் உள்ள பங்கீட்டுத்தொகை சொத்து வரிச்சட்டம் 1957ன் கீழ் “சொத்துடமை” ஆகாது. அதனால் மேற்குறிப்பிட்ட பங்கீடுகள் வைத்திருக்கும் பங்குதாரர் சொத்து வரிக்கு உட்படுத்த அவசியம் ஏற்படாது.

வெளி நாட்டு நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு (FII’s)

D. வருமான வரி சட்டம் 1961ன் கீழ்

1.) பிரிவு 115AD (1)(b) (ii)சட்டத்தின் கீழ், பங்குகளின் பரிமாற்றம் 12 மாதங்களுக்குள் இருப்பின் அதன் மூலம் கிடைக்கும் குறுகிய கால மூலதன ஆதாயத்திற்கு 30% வரி விதிக்கப்படும்.(கூடுதல் கட்டணம் பொருந்தியது)

2.) பிரிவு 115Ad (1)(b)(ii) சட்டத்தின் கீழ், நிர்வாகத்தின் பங்குகளின் பரிமாற்றம் மூலம் கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயம், 10% வரிக்கு உட்பட்டது. (கூடுதல் கட்டணம் உடையது).

3.) நிறுவனத்தின் பங்குகள் மூலம் கிடைக்கும் பங்கீட்டுத்தொகை வருவாய்க்கு வருமான வரி சட்டம் 1961 பிரிவு 10 (34)ன்படி வரி விலக்கு உண்டு.

4.) இதர நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட இரட்டை வரி ஒப்பந்தத்தின் படி (DTA) வட்டி விகித சலுகைகள், நிறுவனத்தில் பங்கீடு செய்வதால் கிடைக்கும் லாபம் போன்றவைக்கு வருமான வரிச் சட்டம் 1961க்கேற்ப பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்புகள் :

i) திருத்தப்பட்ட நிதி சட்டம் 2005ன் படி மேற்கண்ட சலுகைகள் நடப்பு வரி சட்டங்களின்படி செயல்படுத்தப்படுகிறது.

ii) நிறுவனத்திற்கும் அதன் பங்குதாரர்களுக்கும் கிடைக்கும் தற்போதைய வரி சலுகைகள் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முதலீட்டாளரும் அவரது தனிப்பட்ட வரி விவகாரங்கள், செலுத்தவேண்டிய வரி விவரங்கள், பங்கு சம்பந்தமான விவரங்களுக்கு அவரவர் வரி ஆலோசகரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

iii) மேற் குறிப்பிட்ட வரி சலுகைகள் மற்றும் தரப்பட்ட விவரங்கள் அனைத்தும் முழுமையானது அல்ல. நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் வணிக நடவடிக்கைகள், விளக்கங்கள், செயல்பாடுகள் போன்றவைகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மதிப்பீடு மிகுந்த கவனத்துடன் தயார் செய்யப்பட்டிருந்தாலும், எம்.பி.சிட்டல் & கம்பனி பிழைகளுக்கும், விடுபட்டலுக்கும் அல்லது எந்த ஒரு தனி நபருக்கு ஏற்படும் நட்டத்திற்கும், நம்பிக்கை இழப்புக்கும் பொறுப்பாகாது.

iv) குறிப்பிடப்படாத வரையில், மேற்கோள் காட்டப்பட்ட பிரிவுகள் வருமான வரிச்சட்டம் 1961(சட்டம்)த்தின் பிரிவுகளை சேர்ந்தவை.

நிறுவனத்திற்கு

A. வருமான வரிச்சட்டம் 1961ன் கீழ்

1. வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 112 க்கு உட்பட்ட விதிகளின்படி, நிறுவனத்தின் நீண்டகால மூலதன இலாபம் பொதுவான வட்டி விகிதமான 35% க்கு பதிலாக கீழ்கண்டபடி அமைகிறது.

  • நீண்டகால மூலதன ஆதாயம் விலைக்குறியீட்டுடன் கணக்கிடப்பட்டால் @ 20%(கூடுதல் கட்டணத்துடன்).
  • நீண்டகால மூலதன ஆதாயம் விலைக்குறியீடு இல்லாமல் கணக்கிடப்பட்டால் @10%(கூடுதல் கட்டணத்துடன்)

54EC மற்றும் 54EDகளின்படி, குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீண்டகால மூலதன பங்கீடு லாபத்தை சில குறிப்பிட்ட பத்திரங்கள் /பங்கு பத்திரங்களில் முதலீடு செய்வதால் நிறுவனத்திற்கு நீண்டகால மூலதன பங்கீடு இலாபத்தொகையின் மீது வரி விலக்கு கோரும் தகுதி உள்ளது.

2. நிறுவனம் தனது பங்கீட்டுதொகையை 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் பிரிவு 10(38)ன் தன்மையின் படி நெடுந்தவணை மூலதன ஆதாய வரித்தொகையை கட்ட வேண்டிய அவசியம் இல்லை,இச்சலுகை கீழ்கண்ட நிபந்தனைகளின்படி நிவர்த்தி செய்தலுக்கு உட்பட்டது.
(a) சம ஒப்ப பங்கு விற்பனைப் பரிவர்த்தனை 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதியன்று அல்லது அதன் பிறகு செய்யப்பட்டிருந்தாலும்

(b) நிதி (எண்.2) விதிமுறை 2004, அத்தியாயம் (7)ன் கீழ் பரிவர்த்தனை கட்டணம், ஆவணங்கள் பரிவர்த்தனை வரிக்கு உட்பட்டு வசூலிக்கப்படும்.

3. நிறுவனத்தின் பங்கீட்டை மாற்றுவதன் மூலம் ஏற்படும் குறுகிய கால முதலீட்டுத் தொகைக்கு 10% வரிக்கு (பொருத்தமான கூடுதல் கட்டணம் மற்றும் கல்வி தீர்வும் கூடுதலாக) உட்படுத்தப்படும். இச்சலுகை கீழ்கண்ட நிபந்தனைகளின்படி பிரிவு 111(அ)ன் படி நிவர்த்தி செய்தலுக்கு உட்பட்டது:
(a) சம ஒப்ப பங்கு விற்பனைப் பரிவர்த்தனை 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதியன்று அல்லது அதன் பிறகு செய்யப்பட்டிருந்தாலும்.

(b) நிதி (எண்.2) விதிமுறை 2004, அத்தியாயம் (7)ன் கீழ் பரிவர்த்தனை கட்டணம், ஆவணங்கள் பரிவர்த்தனை வரிக்கு உட்பட்டு வசூலிக்கப்படும்.

4. ஏற்றுக்கொள்ளப்படாத வணிக சலுகைகள்/நீண்ட கால மூலதன இழப்புகளும் அதன் சலுகைகளும்

சட்டத்தின்படி, நிறுவனத்தின் ஏற்றுக்கொள்ளப்படாத வணிக இழப்புகள்/ சலுகைகள் வருங்காலங்களில் வரும் இழப்புகளை சரி செய்து கொள்ள சட்டத்தில் கீழ்கண்டவாறு வழிவகை செய்யப்படுகிறது:

i சட்டத்தின் பிரிவு 72ன் படி நிறுவனம் தனது ஏற்றுக்கொள்ளப்படாத வணிகத்தால் உண்டான இழப்புத்தொகை முதல் ஆண்டிலிருந்து கணக்கெடுக்கப்பட்டு அடுத்து வரும் எட்டு ஆண்டுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள இயலும்.

ii சட்டத்தின் பிரிவு 32ன் படி நிறுவனம் முந்தைய ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத வணிகத்தால் ஏற்பட்ட இழப்புத்தொகையை வரும் காலவரையறையற்ற ஆண்டுகளில் தேய்மானம் கணக்கிடப்பட்டு வருங்கால சட்ட விதிகளின்படி சரி செய்து கொள்ளலாம்.

iii சட்டத்தின் பிரிவு 74ன் படி நிறுவனம் தனது ஏற்றுக்கொள்ளப்படாத நீண்டகால மூலதன இழப்பால் உண்டான ஈட்டுத்தொகை முதல் ஆண்டிலிருந்து கணக்கெடுக்கப்பட்டு அடுத்து வரும் எட்டு ஆண்டுகளுக்கு வருங்கால சட்ட விதிகளுக்கு உட்பட்டு நீண்டகால மூலதன லாபத்திற்கு எதிராக சரிசெய்துகொள்ள இயலும்.

5. வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 36(1)(viii) ன் கீழ் நிறுவனத்தின் நீண்டகால நிதி வழங்கும் வணிக லாபத்தில் 40% பிடித்தம் செய்ய உட்படுகிறது. மேற்குறிப்பிட்ட பிடித்தம், கழிப்பு தொகைக்கேற்றவாறு, நிறுவனம் விசேஷ நிதி ஒதுக்கீடு செய்து கொள்ளும் கட்டாயாத்திற்கு உட்பட்டது. அத்தகைய ஒதுக்கீட்டுத்தொகை பங்கு மூலதனம் மற்றும் நிறுவனத்தின் பொதுப் பங்கீட்டுத்தொகையை விட இரண்டு பங்கு அதிகமாக இருந்தால் பிடித்தம் அதன் எல்லைக்கு உட்பட்டு இருக்கும்.

6. வருமான வரிச்சட்டம் 1961,பிரிவு 10(34)ன் கீழ் உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் பெற்ற தவணைப்பங்குக்கு வரி விலக்குச் சலுகைகள்.

7. சட்டத்தின் பிரிவு10(35)க்கு உட்பட்ட விதிகளின் படி நிறுவனத்தின் வருவாய் வரி விலக்குகள் கீழ் வருமாறு:
i) சட்டத்தின் பிரிவு10, கூறு ( 23டி)ன் படி பரஸ்பர நிதி எண்ணிக்கைகள் மூலம் பெற்ற வருவாய்

ii) குறிப்பிட்ட சிறப்பு அதிகாரி மூலம் பெற்ற வருவாய் எண்ணிக்கைகள், அல்லது

iii) குறிப்பிட்ட நிறுவனம் மூலம் பெற்ற வருவாய் எண்ணிக்கைகள்.

சொத்து வரிச்சட்டம் 1957ன் கீழ்.

நிறுவனம், சொத்து வரிச்சட்டம் 1957ன் விதிகளின்படி, அடிப்படை கழிவு ரூ. 15 லட்சத்துக்கு மேற்பட்ட, நிறுவனத்துக்கு சொந்தமான குறிப்பான சில சொத்துக்களுக்கு 1% சொத்து வரி கட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*
Website