நம்மில் பலருக்கு கடன் கிடைக்கும் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பது புரிவதில்லை. சில சமயங்களில், ஒரே அலுவலகத்தில் பணிபுரியும், ஒரே சம்பளம் பெறும் இருவருக்கு பெரிய அளவு வித்தியாசத்தில் கடன் கிடைக்கும். இது எவ்வாறு சாத்தியம்?

கடன் பெறும் தகுதி இரு வேறு முறைகளில் கணக்கிடப்படுகிறது.

  • உங்களால் ஒவ்வொரு மாதமும் கடனை அடைக்கும் திறன்.
  • சொத்து விலையின் ஒரு சதவிகிதம்.

நாம் முதலில் கணக்கெடுப்பை பார்ப்போம் : கடனை திருப்பி செலுத்தும் திறன்

கடனை திருப்பி செலுத்தும் திறன் உங்கள் வருமானம் மற்றும் செலவின் அடிப்படையில் கணக்கிடப்படும். இப்போது உங்கள் மாத வருமானம் ரூ. 20,000 என எடுத்துக்கொள்வோம். மற்றும் உங்கள் செலவு ரூ. 12,000 எனில் உங்களால், நீங்கள் எடுத்த கடனை அடைக்க ரூ. 8000 அளிக்க முடியும். இந்த தொகை உங்கள் கடன் வாங்கும் தகுதியை கண்டுபிடிக்க மறுபடியும் கடனின் காலத்திற்கு ஏற்றவாறு பின் நோக்கி கணக்கிடப்படும். உங்கள் கடனை திருப்பி செலுத்தும் திறன் அதிகமானால், உங்கள் கடன் வாங்கும் திறனும் அதிகரிக்கும்.

இது இவ்வளவு சுலபமா?

இல்லை. இது ஒரு அடிப்படைதான். பிற விஷயங்களும் உங்கள் கடனை திருப்பி செலுத்தும் திறனை மாற்றக்கூடும். உதாரணத்திற்கு, உங்களால், சொந்த வீட்டில் இருப்பதால், இனி ரூ. 2000 வாடகையில் சேமிக்க முடியுமென்றால், உங்கள் கடனை திருப்பி செலுத்தும் திறன் (ரூ. 8000+ரூ. 2000) ஆக உயர்ந்து கணிசமாக உங்கள் கடன் வாங்கும் திறனை உயர்த்தும். மேலும், அதே சம்பளத்திற்கு நீண்ட கால அளவு கடனில், திருப்பி செலுத்தும் திறனும் நீண்ட நாட்களுக்கு கட்டப்படுவதால், கடன் வாங்கும் திறனும் அதிகரிக்கும்.

எது வருமானம் என கணக்கிடப்படும்?

கடன் வாங்குவோரின் வருமானத்தை கணக்கிடும் சில அடிப்படை விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக, கீழ்கண்டவை வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

  • மருத்துவ காப்பீட்டு வரவு, செயலாக்க ஊதியம் அல்லது LTA ஏனெனில் அவை ஒரே மாதிரியான கால இடைவெளியில் ஒரே மாதிரி அளவில் கிடைக்காது.
  • மாதந்தோறும் கிடைக்கும் வட்டி என்பதற்கு நிரூபணம் இருந்தால், வட்டி வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  • இதே காரணங்களுக்காக, அதிக நேர வேலைப்பார்த்தல்
  • சரி பார்க்க இயலாத செலவு கணக்குகள், வாடகை வருமானம் போன்றவை நிலையானது மற்றும் தவறாமல் வருவதற்கான ஆவணச்சான்று இருந்தால் மட்டும் எடுத்துக்கொள்ளப்படும்.

சுய தொழில் செய்பவர்களுக்கு சில ஆவணங்களும், அளவும் சிறுது மாறுபடும்.

ஒரு இடத்திற்கு கூட்டாக விண்ணப்பித்தால், விண்ணப்பிக்கும் இருவரின் வருமானம். மற்றும் உடன் இருப்பவரின் கடனை திருப்பி செலுத்தும் திறனும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஏற்கனவே இருக்கும் கடன்

உங்களுக்கு ஏற்கனவே கடன் இருந்தால், அது உங்கள் திருப்பி செலுத்தும் திறனை பாதிக்கும். ஏனெனில், உங்கள் கடன் கட்டும் திறன் (ரூ.8000 மேற்கூறியவாறு) இருக்கும் கடனின் EMIயின் அளவினால் குறைக்கப்படும். ஆனால், 6 மாதங்கள் போன்ற குறுகிய கால கடன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

காலம்

நீங்கள் உங்களின் கடன் தகுதிக்கு ஏற்ப தொகையை நீண்ட கால அடிப்படையினால், அதிகரிக்க முடியும் என்பதை புரிந்து கொண்ட சமயத்தில், அதன் வரம்பையும் அறிந்து கொள்வது அவசியம்.

கடன் கட்டுவதின் அதிகபட்ச காலம் விண்ணப்பிக்கும் சமயத்தில், உங்கள் வயதைப்பொருத்து மாறும். பணி புரிவோருக்கு உங்கள் வயது 58 / 60 வருடங்களை மீறாமல் இருக்கவும் (உங்கள் அலுவலகத்தில் தீர்மானிக்கப்பட்டபடி), சுய தொழில் புரிவோருக்கு 65 வயதை மீறாமலும் இருக்க வேண்டும்.

இதை மனதில் வைத்தால், அதிக பட்ச காலம் அதிக பட்ச தகுதியை அதிகரிக்கும்.

உங்கள் மாதாந்திர திருப்பி செலுத்தும் நிலையை , தேர்ந்தெடுத்து, தோராயமான தொகையை அறிந்து கொள்ள எங்களிடம் EMI கணக்கிடும் கருவி உள்ளது.

சரியான தொகையை அறிய, தயவு செய்து எங்களை தொலைபேசியின் மூலம் அழைக்கவும். அல்லது சந்திப்பதற்கு நேரில் வரவும். உங்களுக்கு அவற்றை கணக்கிட்டுத்தருவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*
Website