முடிவில், நீங்கள் காசோலையைப்பெற்றுக்கொள்வதுதான் இதின் சிறந்த பகுதி, இது, ப்ராப்பர்டி சட்டப்படி சரியாக இருக்கின்றது என உறுதி செய்யப்பட்ட பின்னரும், நீங்கள் சொத்துரிமை மாற்றம் குறித்த அனைத்து ஆவணங்களை எங்களுக்கு அளித்த பின்னரும் நடைபெறும். இந்த நிலையில், ப்ராப்பர்டியின் விலையில் உங்கள் பங்காக நீங்கள் அளித்த தொகைக்கான ஆதாரம் இருப்பதும் முக்கியமாகும்.

காசோலை மறுவிற்பனையாளர் அல்லது பில்டர், சங்கம் அல்லது அபிவிருத்தி ஆணையம் ஆகியவர்களின் பெயரில் அளிக்கப்படும். விதிவிலக்கான சூழ்நிலையில், குறிப்பான அத்தாட்சி கொடுக்கப்பட்டால் உங்களிடம் நேரடியாக காசோலை கொடுக்கப்படும்.

சாதாரணமாக, கடன் தொகை ப்ராப்பர்டி கட்டப்படுவதின் வளர்ச்சியைப்பொறுத்தே வழங்கப்படும். அதாவது பணத்தின் முழு பட்டுவாடா (மறுவிற்பனை ஃப்ளாட்டாக இருந்தால்) அல்லது கட்டிடத்தின் பகுதியாக (புதியதாக கட்டப்படும் கட்டிடம் அல்லது தனிப்பட்ட கட்டிடமாக) இருந்தால் மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொன்றின், பட்டுவாடா முறையிலும் வித்தியாசம் இருக்கும்.

பகுதி பட்டுவாடா

கடன் தொகை பகுதியாக பட்டுவாடா செய்யப்பட்டபின், உடனடியாக EMI தொடங்கப்படாது. சாதாரணமாக, அவை பிரீ-EMIயாக துவங்கப்படும். அவை அளிக்கப்பட்ட தொகையின் எளிய வட்டியாகும். இந்த முறை முழு பணம் பட்டுவாடா செய்யப்படும் வரை தொடரும். இந்த நிலையில், நீங்கள் அனைத்து ப்ரீ- EMI காசோலைகளும் அளிக்கப்பட்டவுடன் பணமாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முழு பட்டுவாடா

மறு விற்பனை ப்ராப்பர்டியாக அல்லது வசிக்கத்தயாராக உள்ள ப்ராப்பர்டியாக இருந்தால் முழுத்தொகையும் பில்டர் அல்லது விற்பனை செய்பவருக்கு அளிக்கப்படும். உங்கள் பில்டர் மற்றும் கடன் கொடுப்பவரிடையே பரிமாற்றம் செய்யப்படும் அனைத்து ஆவணங்களின் நகல்களையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

தொகை பட்டுவாடா செய்யப்பட்டவுடன், ஆவணங்களின் உரிமை மாற்றம் ஆகிய பின் நீங்கள் அனைத்து அசல் ஆவணங்களையும் எங்களிடம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பணம் பெற்றதற்கான ரசீதையும் நீங்கள் எங்களுக்கு அளிக்க வேண்டும். இது உங்கள் கோப்பில் கடன் ஆவணங்களின் பகுதியாக இருக்கும்.

ஒரு வேளை, உங்கள் ப்ராப்பர்டி வீட்டு வசதி சங்கத்தின் பகுதியாக இருந்தால், நீங்கள் சங்கத்திடம் உங்களின் ஃப்ளாட்டை உங்கள் பெயருக்கு மாற்றி, உங்கள் பெயரில் பங்கு சான்றிதழை வழங்கக்கோரி மற்றும் அவர்கள் கோப்பில் உடமை மாற்றத்தை பதிவு செய்ய வேண்டும்.

மாற்றப்பட்ட இந்த பங்கு சான்றிதழும் கடன் ஆவணங்களின் பகுதியாதலால், அவை எங்களிடம் கோப்பில் சேர்க்கப்படுவதற்காக கொடுக்கப்பட வேண்டும்.

எவ்வாறு திருப்பி கொடுப்பது

குறிப்பாக, பட்டுவாடா செய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட கடன் தொகை மற்றும் முறைக்கேற்ப, 12, 24 அல்லது 36 மாதங்களுக்கான பின் தேதியிட்ட காசோலைகள்/போஸ்ட் டேட்டட் செக்குகள்(PDC) அளிக்கப்பட வேண்டும்.

ஒருகால், தவணை உங்கள் சம்பளத்திலிருந்து நேரடியாக கழிக்கப்பட வேண்டுமென்றால், நீங்கள் வேலைபார்க்கும் இடத்திலிருந்து இந்த ஏற்பாட்டை உறுதி செய்யும் கடிதத்தை அளித்து, நேரடியாக தொகை எங்களுக்கு சேரும்படி செய்ய வேண்டும்.

உங்கள் வங்கியும் உங்கள் வருமான அக்கௌண்டிலிருந்து கடன் அக்கௌண்டிற்கு பணத்தை நேரடியாக செலுத்தும் வசதியை அளிக்கலாம்.

ஆம், உங்களால் EMIயை டிமாண்ட் டிராஃப்ட் மூலமாகவோ அல்லது பணமாகவோ செலுத்த இயலும்.

நீங்கள் தொகையை எங்களின் எந்த கிளைகளில் வேண்டுமானாலும்செலுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*
Website