ஒரு முறை உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டவுடன் நீங்கள் விண்ணப்பித்த தொகை மற்றும் உங்கள் கடனைத்திருப்பிக்கொடுக்கும் திறனுக்கேற்றவாறு, உங்களுக்கு தகுந்த முடிவான கடன் தொகை உங்களுக்கு தெரிவிக்கப்படும். பின்னர் உங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் கீழ் உள்ள வரைமுறை மற்றும் விதிமுறைகளுடன் கூடிய ஒரு ஒப்புதல் கடிதம் அனுப்பப்படும். இந்த வரைமுறை மற்றும் விதிமுறைகள் கடன் தொகை வழங்கப்படுவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டும்.

இசைவு கடிதம்

இந்த இசைவு கடிதத்தில் கடன் தொகை, வட்டி விகிதம், காலம், கடனை திருப்பும் முறை, பிற விவரங்கள் மற்றும் விசேஷ விதிமுறைகள் கூறப்பட்டு இருக்கும்.

அடுத்தபடியாக, ஒப்புதல் கடிதத்தின் வரைமுறை மற்றும் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன், எங்களின் நியமன முறைப்படி உள்ள ஏற்பு கடிதத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலை வரை, இவை அனைத்தும் நீங்கள் கேட்கும் கடன் தொகைக்கான நிதி ஒப்புதல் மட்டுமே. கடன் தொகை, நீங்கள் இசைவு கடிதத்தை ஏற்றுக்கொண்டபின்னரும் அடமானம், சட்டப்படி மற்றும் தொழில்நுட்ப வகையில் தெளிவாக இருந்தால் மட்டுமே பட்டுவாடா செய்யப்படும்.

சட்ட ஆவணங்களை சமர்ப்பித்தல்

அளிக்கப்படும் கடன் தொகையை நீங்கள் ஒப்புக்கொண்டபின், இடத்தின் அசல் ஆவணங்கள் கடன் தொகை உங்களால் முழுவதுமாக திருப்பிக்கொடுக்கப்படும் வரை எங்களிடம் துணைப்பிணையமாக இருப்பதற்காக கொடுக்கப்பட வேண்டும்.

ஒப்பந்தம் கையெழுத்தாவது

ஒப்பந்தம் வரையறுக்கப்பட்ட முறைப்படி கையெழுத்திடப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*
Website