GIC ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடட், (GICHFL) அதன் வாடிக்கையாளர்களுடன் ஒளிவு மறைவில்லாத வர்த்தக தொடர்பை அளிக்கும் கோட்பாட்டை பின்பற்றுகிறது.

  • இலட்சியம் :
    1. வாடிக்கையாளர்களுடன் உள்ள வணிகத் தொடர்பில் குறைந்தபட்ச நியமத்துடன், நல்ல மற்றும் நேர்மையான செயல்முறைகளை ஊக்குவித்தல்.
    2. வாடிக்கையாளர்கள், சேவைகளிலிருந்து சரியாகக்கிடைக்க வேண்டியதை நன்கு புரிந்து கொள்வதற்காக வெளிப்படைத்தன்மையை உயர்த்துதல்.
    3. உயர்ந்த செயல்முறை தரத்தை அடைய போட்டியின் மூலம், வர்த்தனை போக்குகளை ஊக்குவித்தல்;
    4. வாடிக்கையாளர் மற்றும் GICHFஇன் இடையே நேர்மையான மற்றும் இணக்கமான உறவை உயர்த்துதல்;
      மற்றும் வீட்டு கடன் முறையில் நம்பிக்கையை வளர்த்தல்.
    • கோட்பாட்டைப்பிரயோகித்தல் : 

      இந்த கோட்பாடு, GICHFLஇன் அனைத்து பணியாளர்கள் மற்றும் அதன் வர்த்தக முறைகளை நடத்த அங்கீகாரம் பெற்றவர்களுக்குப்பொருந்தும்.

  • பொறுப்பு :
    GICHFL, அனைத்து பரிவர்த்தனைகளிலும் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து வெளிப்படையாகவும் நாணயமாகவும் வீட்டு நிதி தொழிலின் நியம முறைகளுக்கு ஏற்றவாறும், இந்த கோட்பாட்டை பின்பற்றும். GICHFL வாடிக்கையாளர்கள் குழப்பமின்றி புரிந்துகொள்ளும் விதத்தில் தெளிவான விவரங்களை அளிக்கும்:

    1. விதிமுறைகள் மற்றும் வரைமுறைகளுடன் கூடிய திட்டங்களும் சேவைகளும் வட்டி மற்றும் சேவைக்கட்டணங்களுக்கு உட்பட்டவை.
    2. வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்,

    GICHFL, இந்த கோட்பாடின் நோக்கத்தின்படி, தவறுகள் எதேனும் இருந்தால், அவற்றை விரைவாகவும் பரிவுடனும் சரி செய்து வாடிக்கையாளர்களின் முறையீடுகளை கவனிக்கும்.

    GICHFL, வாடிக்கையாளர்களின் சுய விவரங்களை தனிப்பட்ட மற்றும் இரகசிய முறையில் இருத்தி, எந்த ஒரு விவரத்தையும் ஒழுங்குமுறைப்படுத்துவோர் அல்லது கடன் நிறுவனம் போன்ற அரசு அல்லது சட்ட அதிகாரங்கள் அல்லது வாடிக்கையாளர்களே தங்கள் விவரங்களை பகிர்ந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டவர்கள் தவிர வேறு எந்த மூன்றாம் நபருக்கும் வெளிப்படுத்தாது.

    GICHFL வர்த்தகத்தொடர்பு ஆரம்பிக்கும் முன்னர், கடன் வாங்கியவர்களுக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் கோரிக்கையின் பேரில், கோட்பாடுகளின் நகலை அளிக்கும்.

    GICHFL அதன் வாடிக்கையாளர்களிடம் வயது, ஜாதி, இனம், பால், திருமண நிலை அல்லது ஊனம் போன்ற அடிப்படையில் பராபட்சமாக காட்டாது. ஆனாலும், கடன் ப்ராடக்டுகளில் குறிப்பிடப்பட்டபடி ஏதேனும் கட்டுப்பாடு இருந்தால், அவை தொடர்ந்து உபயோகப்படுத்தப்படும்.

  • வெளிப்படுத்துதல் மற்றும் ஒளிவு மறைவின்மை :

    GICHFL வட்டி விகிதம், பொதுக்கட்டணங்கள் மற்றும் பிற செலவுகள் பற்றிய விவரங்களை கீழ்கண்டவைகளின் மூலம் அறிவிக்கும்:
    a.    கிளைகளில் அறிவிப்புக்கள் மூலம்;
    b.    கட்டண விகித பட்டியல் கொடுப்பதன் மூலம்.
  • விளம்பரம், வர்த்தகம் மற்றும் விற்பனை : 

    GICHFL அனைத்து விளம்பரங்கள் மற்றும் விளம்பரப்பொருட்கள் அனைத்தும், தெளிவாகவும், சரியான வழிகாட்டும்படியும் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. நன்நெறி கோட்பாடுகள், திட்டங்களை தனிப்பட்ட முறையில் தகுந்த அடையாளத்துடன், வாடிக்கையாளர்களுக்கு விற்கச்செல்லும் நிறுவனத்தின் விற்பனை அதிகாரிகள்/ பிரதிநிதிகள் ஆகியவர்களுக்கும் பொருந்தும்

  • கடன் தீர்வு மையங்கள்  :GICHFL வாடிக்கையாளர்களின் விவரங்களை அதன் கடன் தீர்வு மையங்களுக்கு அளிக்கும்:-
    a. கணக்கைத்திறப்பதற்கு
    b. வாடிக்கையாளர் கடன் கட்டுவதில் பின் தங்கி இருந்தால்.
    c. தவணையை வசூலிக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால்.
    d. வாடிக்கையாளர்களுக்கு எதிராக சட்ட வழிமுறைகளின்படி கடன் தீர்க்கப்பட்டால்

    GICHFL சட்டப்பூர்வமான தேவைகள் இருந்தால் அல்லது வாடிக்கையாளர் அவ்வாறு செய்ய அனுமதி அளித்திருந்தால், வாடிக்கையாளர்களின் கணக்கைப்பற்றிய பிற விவரங்களை கடன் தீர்வு மையங்களுக்கு அளிக்கும்.

  • கடன் வசூலிப்பு : 

    கடன் அளிக்கப்படும்போது, GICHFL வாடிக்கையாளர்களுக்கு அதைத்திருப்பிச்செலுத்தும் முறைகளை அதன் மொத்தத்தொகை, காலம் மற்றும் கட்டும் காலமுறை போன்றவையின்படி விவரமாக எடுத்துக்கூறும். ஆனாலும், வாடிக்கையாளர் திருப்பிக்கட்டும் அட்டவணைப்படி செலுத்த விட்டால் செலுத்த வேண்டிய தொகையைப்பெற சட்டப்படியான குறிப்பிட்ட முறை கையாளப்படும். அம்முறை, வாடிக்கையாளருக்கு அறிவிப்பு அனுப்பி அவருக்கு நினைவுபடுத்துவது/ அல்லது அவரின் வீட்டிற்கு செல்வது/ அல்லது அவரின் பிணையத்தை கையகப்படுத்துவது போன்றவைகளைக்கொண்டது.GICHFL பணியாளர் அல்லது நிறுவனத்தால், கடனை வசூலிக்க அல்லது பிணையத்தை கையகப்படுத்த அனுமதி பெற்றவர் அவரது அடையாளத்தை, GICHFL அவருக்கு அளித்த அங்கீகார கடிதத்தை காண்பித்து, நிருபிப்பார். மேலும், கோரினால் GICHFL அல்லது GICHFLஇன் அங்கீகாரத்தின்படி அவருக்கு அளிக்கப்பட்ட அடையாள அட்டையையும் காண்பிப்பார். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு காலம் கடந்த தவணைகளைப்பற்றிய அனைத்து விவரங்களையும் அளிக்கும்.

    காலம் கடந்த தவணைகள் குறித்த பிணக்கு மற்றும் கருத்து வேறுபாடுகளை சரி செய்ய பரஸ்பரமாக ஏற்றுக்கொள்ளும்படியும் முறையான வகையிலுமான, அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

    கடன் தவணையை வசூலிப்பதற்காக, வாடிக்கையாளர்களின் இடத்திற்கு வருகை தரும்போது, அவர் ஒழுக்கமாகவும், நாகரீகமாகவும் நடந்து கொள்வார்.

  • வாடிக்கையாளரைப்பற்றி அறிய (KYC) வழிமுறைகள் : 

    GICHFL KYC வழிமுறைகளுக்கான தேவைகளை வாடிக்கையாளர்களுக்கு விவரமாக எடுத்துக்கூறும், மற்றும் அவர்கள் கடன் ஒப்புதல் பெறுவதற்கு முன், கணக்கைத்திறக்கும் முன் மற்றும் இயக்குதலின் முன்னர், தங்களின் அடையாளத்தை நிருபிப்பதற்காக அளிக்கப்பட வேண்டிய ஆவணங்களைப்பற்றித் தெரிவிக்கும். GICHFL நிறுவனத்தின் KYC, பண மோசடிக்கு எதிராக அல்லது மற்ற சட்ட ரீதியான தேவைகளுக்கான விவரங்களை மட்டுமே பெற்றுக்கொள்ளும். தேவைப்படும் கூடுதல் விவரங்கள் தனியாகப்பெற்றுக்கொள்ளப்படும் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்வதன் நோக்கமும் குறிப்பிடப்படும்.

  • சேமிப்பு கணக்கு : 

    GICHFL , அதன் பல்வேறு சேமிப்புத்திட்டங்களின் விவரங்களான வட்டி விகிதம். வட்டி கணக்கிடப்படும் விதம், வைப்புத்தொகையின் காலம், காலம் முடியும் முன்னர் எடுக்கப்படும் பணம், புதுப்பித்தல், வைப்புத்தொகைக்கெதிரான கடன்கள், நியமன வசதிகள் ஆகியவற்றை அளிக்கும்.

  • கடன்கள் :GICHFLயின் கடனை திருப்பி செலுத்தும் திறனின் மதிப்பீடு :

    GICHFLயால், வாடிக்கையாளருக்கு கடன் வழங்கப்படாவிட்டால், அது கடன் மறுக்கப்பட்டதின் காரணத்துடன், வாடிக்கையாளருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்படும். வாடிக்கையாளர், தனது கடன்பாட்டுக்காக பிறரிடமிருந்து உத்தரவாதம் அல்லது பிற பிணையமோ அளிப்பதை GICHFL ஒப்புக்கொள்ள வேண்டும் என எண்ணினால். நிறுவனத்தால், வாடிக்கையாளரின் நிதி விவரங்களை உத்திரவாதம் அளிப்பவர் அல்லது பிணையம் அளிப்பவருக்கு அல்லது அவரின் சட்ட ஆலோசகருக்கு அளிக்கப்படலாம்.

  • கடனுக்கான விண்ணப்பம் மற்றும் அதன் செயல்முறைகள் :
    1. ஒரு கடன் சம்பந்த அறிக்கையை, GICHFL அளிக்கும் சமயத்தில், அதற்கான வட்டி விகிதம், மற்றும் செயல் முறை, முன் கூட்டியே பணம் செலுத்துதலுக்கான கட்டணங்கள் மற்றும் கடன் வாங்குபவர்களை பாதிக்கும் பிற விவரங்களை அளிக்கும்.
    2. கடன் விண்ணப்பத்தை செயல்படுத்தத்தேவையான விவரங்கள், GICHFLக்கு விண்ணப்பிக்கப்படும் சமயத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், GICHFL வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்ளும்.
    3. GICHFL வாடிக்கையாளருக்கு கடன் ஒப்புதலுடன் அதன் வரைமுறை மற்றும் விதிமுறைகளைப்பற்றி தெரிவிக்கும்.
    4. வாடிக்கையாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கடன் ஆவணங்களின் நகலை இலவசமாக பெறும் உரிமை உண்டு
    5. GICHFL கடன் வழங்குதலில், பால், ஜாதி அல்லது மதம் என பாகுபாடு செய்யாது. ஆனால், இது GICHFL சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்களை மேற்கொள்வதையோ பங்கேற்பதையோ தடை செய்யாது.
    6. GICHFL சாதாரணமாக, கடன் வாங்கியவர் அல்லது வங்கி/நிதி நிறுவனத்தின் கோரிக்கைப்படி கடன் கணக்கை மாற்றுவதை தன் விருப்பப்படி செயல்படுத்தும்.
    7. ஒப்பந்தப்படி அல்லது கூடுதல் பிணையம் பெறவோ, திரும்பப்பெறும்/ விரைவாக்கப்படும் தொகைகள் அல்லது செயல்பாடுகளுக்கு GICHFL கடன் வாங்கியவர்களுக்கு கடன் ஒப்பந்த உடன்படிக்கையின்படி அறிவிப்பு அனுப்பும்.
    8. GICHFL, கடன் தொகை முழுதும் கட்டப்பட்டபின் அல்லது மீதம் உள்ள தொகை மொத்தமும் கட்டிய பின்னர் கடன் கட்டியவரின் எதிராக சட்டப்பூர்வமான அல்லது வேறு காரணங்கள் இல்லையெனில், அனைத்து பிணையங்களையும் திரும்பக் கொடுத்து விடும். அப்படியேனும் செயல்படுத்தப்பட வேண்டுமெனில், கடன் வாங்கியவருக்கு, மீதம் உள்ள கட்டப்பட வேண்டிய தொகை மற்றும் நிறுவனம் தகுந்த தொகைகட்டப்படும் வரை பிணையங்களை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் முழு விவரங்களுடன் கூடிய அறிவிப்பு அனுப்பப்படும்.
  • உத்திரவாதம் அளிப்பவர்: 

    ஒருவர் கடனுக்கு உத்தரவாதம் அளிப்பவர் என கருதப்பட்டால், GICHFL அவர்/அவளுக்கு கீழ்காணும் விவரங்களை ஒப்புதலின் பின் தெரிவிக்கப்படுவர்-

    1. கடிதம்/கடன்பாட்டை ஏற்கும் அடிப்படையின் விதிமுறைகளைக்குறிக்கும் உத்திரவாதப்பத்திரம்.
    2. GICHFL அவர்/அவளுக்கு, அவர்/அவள் உத்திரவாதமாக நிற்கும் கடன் வாங்கியவர் கடன் கட்டுவதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், தெரிவிக்கப்படுவர்.
  • கிளை மூடுதல்/இட மாற்றம்: 

    GICHFL, அதன் கிளை அலுவலகம் மூடப்பட்டால்/இடமாற்றம் செய்யப்பட்டால், வாடிக்கையாளர்கள் அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படுவர்.

  • முறையீடுகள் : 

    GICHFL சட்ட முறைகள், மேற்கொண்ட கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளுக்குட்பட்டு வாடிக்கையாளர்கள் திருப்தி அடையச்செய்ய முயலும். ஏதேனும் முறையீடுகள் இருப்பின், வாடிக்கையாளர் அவர்/அவளுக்கு கணக்கு இருக்கும் வர்த்தக அலுவலகத்தின் தலைவரை அணுகி “முறையீட்டு பதிவேட்டில்” முறையீடைப்பதிவு செய்துகொள்ளலாம்

    முறையீட்டை பதிவு செய்தபின், வாடிக்கையாளர் பிற்கால குறிப்பிற்காக, முறையீடு எண் மற்றும் தேதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    வாடிக்கையாளர்கள், முறையிடுவதற்கு சம்பந்தப்பட்ட இடத்திற்கு எழுதி/வேறு விதமாகவும் தொடர்பு கொள்ளலாம். (நிறுவனங்களின் இருப்பிடங்களின் பட்டியலை அறிய தயவு செய்து இணையதளம் ஐ லாக் இன் செய்யவும்.) - www.gichfindia.com )

    திருப்தியளிக்காவிட்டால் அல்லது பதில் கிடைக்காவிட்டால் முறையீடு கீழ் கண்ட வகையில் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும் -

    கடிதம் மூலம் :

    துணைத்தலைவர்
    GIC ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடட்.
    யுனிவர்ஸல் இன்ஷூரன்ஸ் பில்டிங், 3ர்ட் ஃப்ளோர்,
    சர் P M ரோட், ஃபோர்ட்,
    மும்பை 400 001.

    ஈ மெயில் வழியாக : corporate@gichf.com

  • பொது : 

    GICHFL மேலே கொடுக்கப்பட்டுள்ள கோட்பாடுகளை மாறுபடுத்தும்/திருத்தும்/மாற்றும் உரிமை பெற்றது. மேலும், கோட்பாட்டின் நோக்கத்தை பாதிக்காத/இழக்காத வகையில் அவ்வவ்போது புதுப்பிக்கப்படும். இம்மாதிரியான மாற்றங்கள்/திருத்தங்கள் வாடிக்கையாளரின் நன்மை மற்றும் விவரங்களிற்காக, கிளைகள்/நிறுவன அலுவலகங்களில் அறிவிப்புப்பலகையில் ஒட்டப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*
Website