நீங்கள் எங்களிடமிருந்து  கடனுதவி பெற ஒரு விண்ணப்பப்படிவத்தை/a> நிரப்ப வேண்டும். இந்த படிவம் எங்கள் கிளைகள் ஏதேனும்  ஒன்றில் கிடைக்கும் அல்லது கீழ்தரப்பட்ட இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

இந்த படிவத்தில் பல பிரிவுகள் உள்ளன.

மூல விண்ணப்பம்: இந்த பிரிவு ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட தொகை கடனுக்கான முறையான பதிவு ஆகும். திட்டத்தின் விவரங்களை  இங்கு பார்க்கலாம்..

விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை: குறைந்தது ஒரு விண்ணப்பதாரர் இருக்க வேண்டும். துணை விண்ணப்பதாரரும் இருக்கலாம்.

சொந்த விவரங்கள்: ஒவ்வொரு விண்ணப்பதாரர் மற்றும் துணை விண்ணப்பதாரரின் பல சொந்த விவரங்கள், குடியிருப்பு விவரங்கள், வேலைபற்றிய விவரங்களை அளித்திட வேண்டும். நீங்கள் உங்கள் PAN கார்ட் அல்லது வாக்காளர் அட்டையை அளிக்க வேண்டி இருக்கும் மற்றும் உங்கள் வருட வருமானத்தையும் அறிவிக்க வேண்டியிருக்கும்.

நிதி விவரம்: விண்ணப்பதாரர் மற்றும் துணை விண்ணப்பதாரரின் சொத்து மற்றும் கடன் பற்றிய எளிய அட்டவணை அளிக்கப்பட வேண்டும். இது உங்களது தகுதியை நிர்ணயித்து தொகையை கணக்கிட, கொடுக்கப்பட்டுள்ள நிதி சம்பந்த ஆவணங்களான மாத வருமான சீட்டுகள், வருமான வரி தணிக்கை போன்றவையுடன் பொருத்தப்படும். இவற்றைத்தவிர உங்களின் தற்போதைய கடன் விவரங்களும் கொடுக்கப்பட வேண்டும்.

ப்ராப்பர்டி விவரங்கள்: ப்ராப்பர்டி அமைந்திருக்கும் இடம், அதன் பெயர் சரியானதா இல்லையா, அதன் பரப்ப்பளவு (சொந்தமாக கட்டப்பட்ட வீடு எனில்) அல்லது வீட்டின் பரப்பளவு மற்றும் இதைப்போன்ற பிற விவரங்கள் நிரப்பப்பட வேண்டும்.

பொது அறிவிப்புகள்: இவை எவ்வாறு உபயோகப்படுத்தப்படும், இடத்தின் தற்போதைய நிலை என்ன போன்ற எளிய கேள்விகள் கொண்டது:

குறிப்புதவிகள்: : உங்களுடன் பணிபுரிபவர் அல்லது உங்களை குறிப்பிடத்தக்க காலம் வேலை குறித்தோ அல்லது சொந்தமாகவோ அறிந்த குறைந்தது இருவரிடமிருந்து குறிப்புதவிகள்.

கூடுதல் விவரங்கள்: விண்ணப்ப படிவத்துடன் உங்கள் மாதாந்திர வருமான கணக்கு விவரங்களும் அளிக்கப்பட வேண்டும்.

புகைப்படங்கள்: விண்ணப்பதாரர் மற்றும் துணை விண்ணப்பதாரரின் கையொப்பத்துடன் குறைந்தது ஒரு புகைப்படம் அளிக்கப்பட வேண்டும்.

கேரன்டாரின்/ சாட்சியாளர் படிவம்: : ஒவ்வொரு சாட்சியாளரின் சொந்த விவரங்கள், தொடர்பு கொள்ளும் விவரங்கள், நிதி சம்பந்த விவரங்கள் உங்கள் விண்ணப்பத்துடன் பதிவிறக்கம் செய்து மற்றொரு விண்ணப்பத்தில் அளிக்கப்பட வேண்டும்.

வேலை செய்யுமிடம் பற்றிய விவரங்கள்: நீங்கள் வேலை செய்யும் இடம் லிஸ்ட் செய்யப்படாததாக இருந்தால், உங்கள் தொழில் பற்றிய விவரங்கள், போட்டியாளர்கள், அலுவலகங்களின் எண்ணிக்கை, டர்ன் ஓவர் ஆகியவற்றைப்பற்றி சுருக்கமாக எழுதுவது நல்லது. பொதுவாக, வெப்சைட்டில் கொடுக்கப்பட்ட உங்கள் கம்பனி ப்ரொஃபைலே போதுமானது.

ஆவண சரிபார்ப்பு  பட்டியலை உபயோகித்து, அனைத்து ஆவணங்களின் பிரதிகளையும் அளிப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் உண்மையான பிரதிகளை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது கையில் எடுத்துச்செல்லுங்கள்.

வங்கி கணக்கு: சாதாரணமாக, குறைந்தது 12 மாதங்களுக்கான கணக்கு விவரங்களை நீங்கள் அளிக்க வேண்டியிருக்கும். அவை அதன் நடவடிக்கையின் (எத்தனை மற்றும் எம்மாதிரியான பரிவர்த்தனை), சராசரி வங்கி கணக்குத்தொகை, காசோலை திரும்புதல், மற்றும் தொகை செலுத்துதலின் காலமுறை (உ.தா. சம்பளம் எத்தனை நாட்கள் இடைவெளியில் அளிக்கப்படுகிறது) போன்றவையின் பேரில் ஆய்வு செய்யப்படும்.

நேருக்கு நேர் உரையாடல்:

சாதாரணமாக, எங்கள் அதிகாரியுடன் நீங்கள் நேருக்கு நேர் உரையாட வேண்டி இருக்கும். அப்போது நீங்கள் தொகை மற்றும் முறைகளைப்பற்றிய அனைத்து சந்தேகங்களையும் தெளிவபடுத்திக்கொள்ளலாம். சில சமயங்களில், நீங்கள் கூடுதல் உத்தரவாதம் அளிப்பவர் அல்லது விவரங்களை அளிக்கப்படவும் நேரலாம்.

சரிபார்ப்பு:

கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களுக்காகவும் இடம் சரிபார்ப்பு நடத்தப்படும்,
•  முக்கியமாக
•  வீட்டு முகவரி
•  அலுவலக முகவரி
•  வேலை பற்றிய சரிபார்ப்பு
•  வங்கி கணக்கு சரிபார்ப்பு
•  வீட்டு மற்றும் அலுவலக தொலைபேசி எண்கள்
•  இடத்தின் முகவரி

சில சமயங்களில் அளிக்கப்பட்டுள்ள குறிப்புகளின் ஒரு சிறிய சோதனையும் நடத்தப்படலாம். உங்கள் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர், நம்மிடையே நம்பிக்கை ஏற்படுவது எளிதாக இருக்கும்.

கடன் வழங்க ஒப்புதல்:

ஒரு முறை உங்கள் விண்ணப்பம் செயலாக்கப்பட்டபின் விண்ணப்பிக்கப்பட்ட தொகை மற்றும் திருப்பி செலுத்தும் திறனைப்பொருத்து, முடிவான தொகை உங்களுக்கு தெரிவிக்கப்படும். உங்களுக்கு அதன் பின் ஒப்புதல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வரைமுறை மற்றும் விதிமுறைகள் அடங்கிய ஒரு ஒப்புதல் கடிதம் அனுப்பப்படும். இந்த வரைமுறை மற்றும் விதிமுறைகள் கடன் தொகை வழங்கப்படும் முன்னர் நிரப்பப்பட வேண்டும்.

உரிமைச்சலுகை கடிதம்:
உரிமைச்சலுகை கடிதம் கடன் தொகை, வட்டி விகிதம், காலக்கெடு, திருப்பி செலுத்தப்படும் விதம், மற்ற விவரங்கள் மற்றும் விசேஷ விதிமுறைகள்.

ஏற்பு கடிதம் நாங்கள் கொடுக்கும் நிலையான வடிவத்தின்படி, அனுமதி கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறை மற்றும் விதிமுறைகளின்படியான ஆவணங்களுடன் கொடுக்கப்பட வேண்டும். இது நீங்கள் கேட்கும் கடன் தொகைக்கான ஒரு நிதி ஒப்புதல் மட்டுமே. கடன் தொகை நீங்கள் உரிமைச்சலுகை கடிதத்தை ஒப்புக்கொண்டு, அடமானம், சட்டப்படி மற்றும் தொழில்நுட்ப வகையில் தெளிவாக இருந்தால் மட்டுமே வழங்கப்படும்.

சட்டப்படியான ஆவணங்களை அளிப்பது:
அந்த உரிமைச்சலுகையை நீங்கள் ஒப்புக்கொண்ட பின் நீங்கள் உங்கள் சொத்தின் அசல் ஆவணங்களை கடன் கட்டி முடிக்கும் வரை பாதுகாப்பிற்காக எங்களிடம் கொடுக்க வேண்டும். மேலும் இந்த நிலையில், விதிமுறைப்படி கூட்டு பாதுகாப்பு போன்ற ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது:
ஒப்பந்தம் மற்றும் பிற ஆவணங்கள் முறைப்படி கையெழுத்திடப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*
Website