வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் மூன்று அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை மற்றும் கல்வி போன்றவைக்கு அடுத்த நான்காவது தேவையாகும். குடியிருப்பு மிக முக்கியமான அம்சமாகவும் மக்களின் பொருளாதார நிலையை அளவிடுவதாகவும் உள்ளது. அது கொள்கை முனைப்பு மற்றும் தலையீடுகளின் முக்கியமான பிரிவாக கருதப்படுகிறது. வீடு ஒரு சமூக தேவை என முன்பே அடையாளம் காணப்பட்டு, மனிதனால் கற்காலம் முதலே புதுமை மற்றும் கண்டுபிடிப்பை கொண்டுள்ளது.

வீடு மனிதனின் முக்கிய தேவைகளை ஒன்றாக விளங்குவதாலும், வீட்டிற்கான தேவை மக்கள் தொகை மற்றும் வாழ்க்கைத்தரத்துடன் சேர்ந்து வளர்ந்து வருவதாலும், வீடு வாங்குவதற்கான நிதி வசதிகளின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. வீட்டு வசதி பிரிவின் முக்கியத்துவம், நாம் வீட்டை சிறந்த முதலீடு எனவும், நம் உழைப்பின் பலனை முதலீடு செய்ய அல்லது சேமிப்பு என எண்ணுவதன் மூலமும் முடிவு செய்யப்படுகிறது. இன்று வீட்டுக்கடன் நிதி நிறுவனங்கள் என அழைக்கப்படுபவைகள் பல வருடங்களாக, நிதி வசதிகளை மேம்படுத்தி வீட்டு வசதியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்து வருகின்றன. அவைகளின் திறன் வீட்டு வசதியிற்காக மட்டும் நிதி உதவி அளிப்பதில் உள்ளது. இவ்வாறான சிறந்த பிண்ணனி உடையது GIC ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடட் (GICHFL).

GIC ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடட், 12 டிசம்பர் 1989 ‘GIC க்ரிஹா வித்தா லிமிடட்” என்ற பெயரில் துவங்கப்பட்டது. இந்த பெயர் 16 நவம்பர் 1993 அன்று வழங்கப்பட்ட கூட்டிணைவின் புதிய சான்றிதழ்படி தற்போதைய புதிய பெயருக்கு மாற்றப்பட்டது. தனிப்பட்டவர்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு நேரடியாக கடன் அளித்து இந்தியாவில் குடியிருப்பு வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. GICHFLஇன் முதல் தொழில், தனிப்பட்டவர் மற்றும் குடியிருப்பிற்கான வீடு மற்றும் ஃப்ளாட்டுகள் கட்டும் பணியிலுள்ள தனி நபர்/குழுக்களுக்கு வீட்டுக்கடன் வழங்குதல் ஆகும். இந்த நிர்வாகத்தின் இலட்சியம் இந்தியாவின் குடியிருப்பின் வருங்காலத்தை முன்னேற்றுவதே ஆகும். மேலும், GICHFL, அதன் வெற்றியும் வளர்ச்சியும் கீழ்காணும் இலட்சியங்களை சார்ந்துள்ளது என எப்பொழுதும் நம்பி வருகிறது.

  • முக்கிய பொது நிறுவன குடிமகனாக இருந்து வாடிக்கையாளர்களுக்கு நட்புணர்வுடைய நிதித்திட்டங்களை சேவை மனப்பான்மை சூழலில் அளித்து குடியிருப்பு வசதிகளை உயர்த்துதல்.
  • முக்கிய பொது நிறுவன குடிமகனின் நற்குணங்களை பிரதிபலித்து போட்டி சூழலில் ஒருங்கிணைந்து வளர.
  • செல்வங்களை உருவாக்கி பங்குதாரர்களின் முதலீட்டிற்கு சிறந்த தொகையை வெகுமதியாக அளிக்க.

ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்போரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவங்களான நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பனி லிமிடட், த நியூ இந்தியா அஷூரன்ஸ் லிமிடட், த ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் கம்பனி லிமிடட் மற்றும் யுனைடட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பனி லிமிடட்டுடன் UTI, ICICI, IFCI, HDFC மற்றும் SBI போன்ற நிறுவங்களின் பங்கு முதலீட்டுடன் ஊக்குவிக்கப்பட்டது.

GICHFL தற்போது அதன் வர்த்தகத்திற்காக இந்தியாவில் 53 கிளைகள் கொண்டுள்ளது. அது விற்பனை பிரிவின் (SAs) உதவியுடன் செயல்பட்டு வரும் திறமையான மார்க்கெடிங் குழவை உடையது. அது கடன் வாங்கும் தனிப்பட்ட நபருக்கு நிதி வசதி அளிப்பதற்காக பில்டர்களுடன் இணைந்து செயல்படுகிறது. மேலும், பலவிதமான நிதி வசதிகளுக்காக நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுகிறது.

நிறுவன வரலாறில் முக்கிய நிகழ்வுகள்
வருடம் நிகழ்வு
1989 நிறுவனம் “GIC க்ரிஹ் வித்தா லிமிடட்” என்ற பெயரில் துவங்கப்பட்டது.
1989-91 நிறுவனம் 8 இடங்களில் அதன் செயல்பாட்டுகளை துவங்கியது.
1991-92 நிறுவனம் தொழிலாளர் மற்றும் பில்டர்கள் வீட்டு வசதி திட்டத்தை துவங்கியது.
1992-93 நிறுவனத்தின் பெயர், “GIC ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடட்” என மாற்றப்பட்டது. நிறுவனத்தால் அப்னா கர் யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டது.
1993-94 நிறுவனத்தின் பங்குரிமை வழங்கலான 1:1; முதலீடு ரூ.10 கோடியை எட்டியது.
1994-95 நிறுவனம் அதன் முதல் IPOவை துவங்கி ரூ. 40 கோடி கூடுதல் முதலீட்டை அடைந்தது.
1996-97 நிறுவனம் அதன் கணினிமயமாக்கும் முறைகளை துவங்கியது.
2003-04 நிறுவனம் கடன் ஒப்புதல், வழங்குதல் மற்றும் இலாபத்தில் 40%க்கும் மேலான தொழில் வளர்ச்சியை பதிவு செய்தது. அதன் விளைவாக தனிப்பட்ட வீட்டு கடன் வழங்குவதில் நிறுவனத்தின் ஆண்டு வர்த்தகம் ரூ. 500 கோடியை தாண்டியது. மேலும் அதன் மொத்த மதிப்பு ரூ. 1000 கோடியை தாண்டியது.
2004-05 நிறுவனம் தொழில் வளர்ச்சி விகிதத்தில் 40%க்கும் மேற்பட்ட கடன் ஒப்புதல்கள், வழங்குதல் மற்றும் இலாபத்தை பதிவு செய்தது. 89, 75,561 சரி ஒப்பு பங்கு ரூ.16 என்ற விலையில் 2 பங்குகளுக்கு 1 சரி ஒப்பு பங்கு என்ற விகிதத்தில், அளிக்கப்பட்டது. செலுத்திய மூலதனம் ரூ. 26.93 கோடியை தொட்டது.
2005-06 NPA மற்றும் இலாப தொகுப்பில் கவனம்.
2006-07 உரிமைப்பங்கு வழங்கல் - 19 மே, 2006இல், சரி ஒப்பு பங்கின் எண்ணிக்கை 2,69,25,533 பங்கிற்கு ரூ.10/ என்ற வீதத்தில் பங்கிற்கு பிரிமியம் ரூ. 30 என, மொத்தத்தில் ரூ. 107,70,21,320, சரி ஒப்பு பங்குதாரர்களுக்கு, 1 சரி ஒப்பு பங்கிற்கு 1 சரி ஒப்பு பங்கு என்ற வீதத்தில், உரிமை அடிப்படையில் வழங்கப்பட்டது. அதன் பின்னர் நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ. 26.93 கோடி உயர்ந்து, பங்கு ஊக்கப்பணம் ரூ. 80.78 கோடியாக உயர்ந்தது. 31 மார்ச் 2007இல் செலுத்திய மூலதனம் ரூ. 53.86யில் நின்றது.இந்த வருடத்தின் பங்கு வீத சதவிகிதம், கடந்த வருடத்தின் 15% இலிருந்து 30% ஆக உயர்ந்தது. அந்த வருடத்தில் நிறுவனம் அதன் கிளையை மஹாராஷ்ட்ராவின் மும்பையின் மேற்கு பகுதியிலுள்ள விராரில் துவங்கியது.
2007-08 தனிப்பட்ட கடன் தொகை அவ்வருடத்தில் ரூ. 2500 கோடியை தாண்டி 31 மார்ச், 2008இல் ரூ. 2682 கோடியில் நின்றது.
2008-09 தனிப்பட்ட கடன் தொகை அவ்வருடத்தில் ரூ. 2500 கோடியை தாண்டி 31 மார்ச், 2009இல் ரூ. 2682 கோடியில் நின்றது.
2009-10 ந்த வருடத்தில் நிறுவனம் அதன் முதல் கிளையை குஜராத்தில் உள்ள வதோதராவில் ஆரம்பித்தது. மேலும், நாக்புர் மற்றும் நாசிக்கில் கிளைகளை துவங்கி அதன் கட்டமைப்பை விரிவுபடுத்தியது.கடன் வாங்கியவர்களில், தகுதி பெற்றவர்களுக்காக ஆயுள் காப்பீட்டு கழகத்துடன் இணைந்து, தீர்க்கப்படும் கடன் தொகை முழுவதற்குமான, விரும்பினால் எடுத்துக்கொள்ளப்படக்கூடிய குழு காப்புறுதி திட்டத்தை அளித்தது.
2010-11 அவ்வருடத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட தனிப்பட்ட கடன் ரூ. 1000 கோடியைத்தாண்டி ரூ. 1069 கோடியை எட்டியது. தனிப்பட்ட கடன் தொகை மார்ச் 31, 2011இல் ரூ. 3000த்தைதாண்டி ரூ. 3406 கோடியாக ஆனது.பங்கு வீதம் ஒரு முறை வழங்கப்பட்ட பங்கு வீதம் 10% உட்பட 55% என அறிவிக்கப்பட்டது ராஜஸ்தானின் இரண்டாவது கிளையை ஜோத்பூரிலும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது கிளையை துர்காபூரிலும் துவங்கி மஹாராஷ்ட்ராவில் கோலாப்பூரில் கிளையை ஆரம்பித்து மேலும் விரிவடைந்தது.
2011-12 அவ்வருடத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட தனிப்பட்ட கடன் ரூ. 1000 கோடியைத்தாண்டி ரூ. 1069 கோடியை எட்டியது. தனிப்பட்ட கடன் தொகை மார்ச் 31, 2011இல் ரூ. 3000த்தைதாண்டி ரூ. 3406 கோடியாக ஆனது நிறுவனம் மஹாராஷ்ட்ராவில் மேலும் விரிவடைந்து மும்பை புறநகரில் உள்ள நேரே பன்வேலில் புதிய கிளையை துவங்கியது.
2012-13 நிறுவனம் அதன் முதல் கிளையை மத்திய பிரதேசத்தின் இந்தோரில் துவங்கியது.
2013-14 நிறுவனம் அதன் 43வது கிளையை பாட்னாவில் துவங்கியது.
2013-14 நிறுவனம் அதன் 44வது கிளையை அஹமதாபாதில் துவங்கியது.
2013-14 நிறுவனம் அதன் 45வது கிளையை கல்யாணில் துவங்கியது.
2013-14 நிறுவனம் அதன் 46வது கிளையை போரிவலியில் துவக்கியது
2013-14 நிறுவனம் அதன் 47வது கிளையை டேராடூனில் துவக்கியது
2014-15 நிறுவனம் தனது 48வது கிளையை மீரட்டில் துவக்கியது
2014-15 நிறுவனம் தனது 49வது கிளையை போய்சரில் துவக்கியது
2014-15 நிறுவனம் தனது 50வது கிளையை காஸியாபாத்தில் துவக்கியது
2014-15 நிறுவனம் தனது 51வது கிளையை மார்கோவில் துவக்கியது
2014-15 நிறுவனம் தனது 52வது கிளையை துவாரகாவில் துவக்கியது
2014-15 நிறுவனம் இந்த ஆண்டு வெள்ளி விழா கொண்டாடுகிறது